13 September 2014

சாம்சங் முந்தியது!

















பெர்லின் தொழில்நுட்பக் கண்காட்சியில் சாம்சங், மோட்டரோலா, சோனி உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்தன. மோட்டரோலா, மோட்டோ ஜி ,மோட்டோ எக்ஸ் போன்கள், மோட்டோ 360 ஸ்மார்ட் வாட்சுகளை அறிமுகம் செய்தது.

வட்ட வடிவிலான மோட்டோ 360 ஸ்மார்ட் வாட்ச் பரவலாகப் பாராட்டைப் பெற்றுள்ளது. இதற்கு போட்டியாக எல்ஜி நிறுவனமும் வட்ட வடிவ ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்தது. தைவான் நிறுவனமான ஆசசும் (Asus) ஜென் வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்தது. சோனி புதிய எக்ஸ்பிரியா ஸ்மார்ட்போன் , ஸ்மார்ட் வாட்ச் 3 மற்றும் ஸ்மார்ட் பேண்ட் பிட்னஸ் சாதனத்தை அறிமுகம் செய்தது.

சாம்சங், காலெக்ஸி நோட் 4, காலெக்ஸி எட்ஜ் மற்றும் கியர் எஸ் சாதனங்களை அறிமுகம் செய்தது. காலெக்ஸி எட்ஜ் ஓரத்திலும் பார்க்கக்கூடிய புதுமையான டிஸ்பிளே கொண்டிருக்கிறது. இது கியர் எஸ் ஸ்மார்ட் வாட்ச் ரகத்தைச் சேர்ந்தது.


சாம்சங் கியர் வீஆர் எனும் மெய்நிகர் சாதனத்தையும் (வர்ச்சுவல் ரியாலிட்டி) அறிமுகம் செய்தது. வர்ச்சுவல் ரியாலிட்டி பிரிவில் செயல்பட்டு வரும் ஆக்குலஸ் ரிப்ட் டெவலப்பர் கிட்டுடன் இணைந்து இதனை சாம்சங் அறிமுகம் செய்துள்ளது. பல நிறுவனங்கள் இந்தப் பிரிவில் திட்டங்களை வைத்திருக்கும் நிலையில் சாம்சங் முந்திக்கொண்டு முதல் நுகர்வோர் மெய்நிகர் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆக்குலஸ் ரிப்டின் சாதனங்களே கூட அடுத்த ஆண்டிலேயே சந்தைக்கு வர உள்ளன.

No comments:

Post a Comment