03 October 2016

samsung j5 2016 UNLCOK ( Euro SIM Only - Unregister Provider )


28 November 2015

SAMSUNG S5260 UNLOCK VIA Z3X


13 September 2014

சாம்சங் முந்தியது!

















பெர்லின் தொழில்நுட்பக் கண்காட்சியில் சாம்சங், மோட்டரோலா, சோனி உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்தன. மோட்டரோலா, மோட்டோ ஜி ,மோட்டோ எக்ஸ் போன்கள், மோட்டோ 360 ஸ்மார்ட் வாட்சுகளை அறிமுகம் செய்தது.

வட்ட வடிவிலான மோட்டோ 360 ஸ்மார்ட் வாட்ச் பரவலாகப் பாராட்டைப் பெற்றுள்ளது. இதற்கு போட்டியாக எல்ஜி நிறுவனமும் வட்ட வடிவ ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்தது. தைவான் நிறுவனமான ஆசசும் (Asus) ஜென் வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்தது. சோனி புதிய எக்ஸ்பிரியா ஸ்மார்ட்போன் , ஸ்மார்ட் வாட்ச் 3 மற்றும் ஸ்மார்ட் பேண்ட் பிட்னஸ் சாதனத்தை அறிமுகம் செய்தது.

சாம்சங், காலெக்ஸி நோட் 4, காலெக்ஸி எட்ஜ் மற்றும் கியர் எஸ் சாதனங்களை அறிமுகம் செய்தது. காலெக்ஸி எட்ஜ் ஓரத்திலும் பார்க்கக்கூடிய புதுமையான டிஸ்பிளே கொண்டிருக்கிறது. இது கியர் எஸ் ஸ்மார்ட் வாட்ச் ரகத்தைச் சேர்ந்தது.


சாம்சங் கியர் வீஆர் எனும் மெய்நிகர் சாதனத்தையும் (வர்ச்சுவல் ரியாலிட்டி) அறிமுகம் செய்தது. வர்ச்சுவல் ரியாலிட்டி பிரிவில் செயல்பட்டு வரும் ஆக்குலஸ் ரிப்ட் டெவலப்பர் கிட்டுடன் இணைந்து இதனை சாம்சங் அறிமுகம் செய்துள்ளது. பல நிறுவனங்கள் இந்தப் பிரிவில் திட்டங்களை வைத்திருக்கும் நிலையில் சாம்சங் முந்திக்கொண்டு முதல் நுகர்வோர் மெய்நிகர் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆக்குலஸ் ரிப்டின் சாதனங்களே கூட அடுத்த ஆண்டிலேயே சந்தைக்கு வர உள்ளன.

ஐந்து மில்லியன் ஜிமெயில் ஹேக் செய்யப்பட்டது. உங்கள் கணக்கு?











ஐந்து மில்லியன் ஜிமெயில் கணக்குகள் பாஸ்வேர்டுகளுடன் இணையத்தில் வெளியிடப்பட்டன 
புதுடெல்லி,
ரஷ்யாவை சேர்ந்த 'ஹேக்கர்' ஒருவர் 4.93 மில்லியன் கூகுள் கணக்குகளை ஹேக் செய்து அவற்றின் பாஸ்வேர்டு மற்றும் யூசர்நேம்களை ஆன்லைனில் போஸ்ட் செய்திருப்பது பீதியை கிளப்பியுள்ளது.
உங்களுடைய ஜிமெயில், கூகுள் பிளஸ், கூகுள் டிரைவ், ஹேங் அவுட், யூடியூப் போன்ற கூகுள் கணக்குகள் பாதுகாப்பாக உள்ளதா? என்பதை அறிய 
என்ற லிங்க்-ஐ கிளிக் செய்து அதில் உங்கள் ஜிமெயில் ஐ.டியை கொடுங்கள்.
உங்களுக்கு ஜிமெயில் முகவரியை பதிவு செய்ய விருப்பமில்லை எனில் அதிலுள்ள கடைசி 3 எழுத்துக்களை மட்டும் விட்டுவிட்டு பதிவு செய்யலாம். நீங்கள் பதிவு செய்த பெயரிலுள்ள அனைத்து இமெயில் கணக்குகளையும் இந்த இணையதளம் பட்டியலிடும். அவற்றில் உங்கள் இமெயில் முகவரி இருந்தால் உங்கள் அக்கௌண்ட் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது என அர்த்தம். அப்படி இருந்தால், உடனடியாக பாஸ்வேர்டை மாற்றி விடுங்கள்.

அப்புறம் அந்த ஐந்து மில்லியன் கணக்குகளும் வேண்டும் என்று சொல்லுறவங்க இந்த இணைப்பில் தொடர்பு கொள்ளுங்கள்

11 September 2014

IPHONE 6 உடன் ஆப்பிள் வழங்கும் அடுத்த அதிரடிச் சலுகை???

அப்பிள் நிறுவனம் அடுத்த வாரமளவில் மொபைல் சாதனங்களுக்கான iOS 8 இயங்குதளத்தினை அறிமுகம் செய்யவுள்ளது.

இவ் இயங்குதள அறிமுகத்துடன் பயனர்களுக்கு அதிரடிச் சலுகை ஒன்றினை வழங்கவும் அப்பிள் நிறுவனம் தயாராகியுள்ளது.

அதாவது ஒன்லைன் சேமிப்பு வசதியை தரும் iCloud இனை சலுகை விலையில் பயனர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.


இதன்படி 25GB வரையான சேமிப்பு வசதியினை 0.99 டொலர்களுக்கும், 200GB வரையான சேமிப்பு வசதியினை 3.99 டொலர்களுக்கும், 500GB வரையான சேமிப்பு வசதியினை 9.99 டொலர்களுக்கும், 1TB வரையான சேமிப்பு வசதியினை 19.99 டொலர்களுக்கும் மாதாந்த அடிப்படையில் பெற்றுக்கொள்ள முடியும்.

ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ்-ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள்

நியூயார்க்: பலரும் எதிர்பார்த்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ் (6+)-, கலிபோர்னியாவில் உள்ள குபர்டினோ நகரில் நடந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.







ஐபோன் 6 மாடல்களை அறிமுகப்படுத்தி, அந்நி
றுவனத்தின் சி.இ.ஓ.., பேசுகையில், இன்று ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ் மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
























இரண்டு மாடல்களும் மெலிதாக இருக்கும். ஐபோன் 6 போனின் டிஸ்பிளே 4.7 இன்ச் என்ற அளவிலும், 6 பிளஸ் போன் டிஸ்பிளே 5.5 இன்ச் என்ற அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது,

இந்த போன்கள் ரெட்டினா எச்டி டிஸ்ப்ளே உள்ளது.
இந்த போன்கள் மற்ற போன்களை விட 25 சதவீதம் வேகமாக இருக்கும். இந்த போன்கள் வளைவான முனை கொண்டதாக இருக்கும்.

ஐபோனுக்காக 1.3 லட்சம் அப்ளிகேசன்கள் உள்ளன. அதிகமாக விற்பனையாகும் ஸ்மார்ட்போன்கள் ஐபோன்கள் தான்.


இன்றைய நாள் ஐபோன்கள் வரிசையில் மிகப்பெரிய சாதனை என கூறினார்.